×

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 6ம் தேதி நடப்பதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கான மாற்றம் நாளை (5ம் தேதி) இரவு 8 மணி முதல் மறுநாள் (6ம் தேதி) இரவு 8 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் டவுன் பஸ்கள் வழித்தடங்கள்: அண்ணாசிலை-மாம்பழச்சாலை-திருவானைக்காவல் சந்திப்பு-சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு-அம்பேத்கர் நகர் - சிங்கப்பெருமாள் கோயில் பஸ் நிறுத்தம்-நெல்சன் ரோடு- காந்தி ரோடு-ஸ்ரீரங்கம் பஸ் நிலையம்-அம்மாமண்டபம்-மாம்பழச்சாலை-அண்ணா சிலை- சத்திரம் பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் டவுன் பஸ் வழித்தடங்கள்: அண்ணாசிலை-மாம்பழச்சாலை-திருவானைக்காவல் சந்திப்பு-சோதனைச் சாவடி எண்.6-கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம்-பஞ்சக்கரை ரோடு-அம்பேத்கர் நகர்-சிங்கப்பெருமாள் கோயில் பஸ் நிறுத்தம்-நெல்சன் ரோடு-காந்தி ரோடு- ஸ்ரீரங்கம் பஸ் நிலையம்-அம்மா மண்டபம்-மாம்பழச்சாலை-அண்ணா சிலை-சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

பெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகர பஸ்கள் வழித்தடங்கள்: அண்ணாசிலை-ஓடத்துறை பாலம்-தேசிய நெடுஞ்சாலை-ஓய் ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம்-ஓய் ரோடு சந்திப்பு-சஞ்சீவிநகர் சந்திப்பு- ஓயாமரி ரோடு-ஓடத்துறை பாலம் வழியாக சத்திரம் பஸ் நிலையம் வர வேண்டும். பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்: முக்கிய நபர்களின் வாகனங்கள், அண்ணாசிலை-மாம்பழச்சாலை-அம்மா மண்டபம் ரோடு- ராகவேந்திரா ஆர்ச்-திருவள்ளுவர் தெரு-மேற்கு சித்திரை வீதி வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள்: பஞ்சக்கரை ரோடு-வடக்கு மொட்டை கோபுரம்-வடக்கு சித்திரை வீதி வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு- ராகவேந்திரா ஆர்ச்-அம்மாமண்டபம்-மாம்பழச்சாலை-காவிரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்: கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள், காவல் சோதனைச்சாவடி எண்.7-அன்பிலார் சிலை சந்திப்பு-அண்ணா சிலை-ஓடத்துறை பாலம்-தேசிய நெடுஞ்சாலை-ஒய் ரோடு சந்திப்பு-சோதனை சாவடி எண்.6- பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்: காவல் சோதனைச்சாவடி எண்.7-அன்பிலார் சிலை சந்திப்பு-அண்ணா சிலை-மாம்பழச்சாலை-திருவானைக்காவல் சந்திப்பு-சோதனை சாவடி எண்.6-பஞ்சக்கரை ரோடு-தசாவதார சன்னதி- மேலூர் ரோடு-மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு-ராகவேந்திரா ஆர்ச்-அம்மா மண்டபம்-மாம்பழச்சாலை-காவிரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள்: பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு-கொண்டையம்பேட்டை, ‘ஒய்” ரோடு சந்திப்பு-காவல் சோதனை சாவடி எண்.6-பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்: பால்பண்ணை-சஞ்சீவிநகர் சந்திப்பு-கொண்டையம்பேட்டை, ‘ஓய்” ரோடு சந்திப்பு-பஞ்சக்கரை ரோடு-தசாவதார சன்னதி-மேலூர் ரோடு வழியாக மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு-ராகவேந்திரா ஆர்ச்-அம்மாமண்டபம்- மாம்பழச்சாலை-காவிரி பாலம் வழியாக செல்ல வேண்டும். சென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள்: ‘ஒய்” ரோடு சந்திப்பு-பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரி நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

சென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்: ‘ஓய்” ரோடு சந்திப்பு-பஞ்சக்கரை ரோடு-தசாவதார சன்னதி-மேலூர் ரோடு-மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு-ராகவேந்திரா ஆர்ச்-அம்மா மண்டபம்- மாம்பழச்சாலை-காவிரி பாலம் வழியாக செல்ல வேண்டும். வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு ஆட்டோவில் வருகை தரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள்: திருவானைக்காவல் சந்திப்பு-காந்தி ரோடு-தேவி தியேட்டர் சந்திப்பு-வடக்கு தேவி ரோடு- கிழக்கு சித்திரவீதி வந்து அவர்களை இறக்கிவிட்டு பின்னர் தேவி தியேட்டர் சந்திப்பு- காந்திரோடு-திருவானைக்காவல் சந்திப்பு-மாம்பழச்சாலை வழியாக செல்ல வேண்டும். உத்திரை வீதியில் குடியிருப்பவர்கள் இன்று முதல் 6ம் தேதி வரை தங்களது வாகனங்களை வடக்கு சித்திரை வீதியில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இத்தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ தெரிவித்துள்ளார்.

Tags : Sri Lanka ,Srirangam ,Trichy , Srirangam
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்